சிவலிங்கம்

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.’லிம்’ என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.’கம்’ என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்

 

இலிங்கம்லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக்குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது.மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்.

மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன்

பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

 • ருத்ர பாகம்
 • விஷ்ணு பாகம்
 • பிரம்ம பாகம்
 • சக்தி பாகம்

இலிங்க வகைகள்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள்எனவும் அறியப்படுகின்றன.

 1. சிவ சதாக்கியம்
 2. அமூர்த்தி சதாக்கியம்
 3. மூர்த்தி சதாக்கியம்
 4. கர்த்திரு சதாக்கியம்
 5. கன்ம சதாக்கியம்

இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,

 1. சுயம்பு லிங்கம்– தானாய் தோன்றிய லிங்கம்.
 2. தேவி லிங்கம்– தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
 3. காண லிங்கம்– சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
 4. தைவிக லிங்கம்– மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
 5. ஆரிட லிங்கம்– அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
 6. இராட்சத லிங்கம்– இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
 7. அசுர லிங்கம்– அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
 8. மானுட லிங்கம்– மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

இவை தவிற பரார்த்த லிங்கம். சூக்கும லிங்கம்,ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *