s11

சித்தர்களின் சிந்தனைப்படி உலகத்தின் முடிவு

 உலகத்தின் முடிவு காலத்தில் 12 -சூரியன்களும் உதித்து 100 ஆண்டுகள் மழையில்லாமல் பூமியில் உள்ளது எல்லாம் எரிந்து நீராகி மேகங்கள் சுமந்து நிற்கும்.  அந்த வெப்பம் ஆதி சேஷனையும் மிக கடுமையாய் தாக்கி பஸ்பம் செய்யும்போது அதன் பரிணாம குடங்கனின்று நச்சு தீதோன்றி சூரியனோடுசேர்ந்து ஆதி சேஷனையும் துவாதச ஆதித்தர்களையும் எரித்து நீராக்க சப்த  மகர மேகங்கள் தோன்றி 100 ஆண்டுகள் யானையின் துதிக்கையை போன்ற அளவில் மழை துளி கொண்டு மழை பெய்யும்.  அதனால் உண்டான நீர்பெருக்கு எங்கும் நிறைந்து மூடி நிற்கும்.  அந் நீரானது தன்னிடத்தே பூமி ஒடுங்கி நிற்க வாயு தோன்றி விளங்கும்.  அவ்வாறு விளங்கும் பிரளயத்தை அதனின்று தோன்றிய வட முகாக்கினி என்னும் ஊழி காற்றால் ஒடுங்கும் அக் காற்று ஆகாயத்தில் ஒடுங்கும்.  அந்த ஆகாயம் அகங்கார தத்துவத்திலும், அகங்கார தத்துவம் மகாமாயையிலும் – அந்த மாமறை பிருகிருதி மாயையிலும், பிருகிருதி மாயை அசுத்த மாயையிலும், அசுத்த மாயை, சுத்த மாயையிலும், சுத்த மாயை – பராசத்தியிலும், பராசத்தி சிவத்திலுள்ளும் ஒடுங்க சிவ பெருமான் ஒருவரே இறுதியில் விளங்கி திரு நடனம் புரிந்தார்.  இதுவே பிரம்மாக சங்கார நிமுக்தம் இவ்வாறு அழிந்த உலகம் ஈஸ்வரனால் பின்  சிருஷ்டிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>