S12

காலம் மறப்பதில்லை

மனிதனுக்கு எல்லாவற்றின் மேலும் விருப்பம் உண்டு.
எல்லாமும் மனிதனை விரும்புகின்றன.
இந்த பரிமாற்றம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு மாடு – குத்துபடுகிறவன் அதை தன் பக்கம் ஈர்க்காதவரை அது அவனை கொம்பால் குத்தாது. ரத்தம் சிந்தியதில் மாட்டைவிட மனிதனின் குற்றமே அதிகம்.
கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நினைக்கிறான். மரண குத்துக்கு இருவருமே காரணமாவார்கள்.
கொள்ளை கொடுத்தவன் கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான். கொள்ளையில் இருவருக்கும் பங்கு உண்டு.
மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது.

மனிதனின் மோசமான மறதிதான் கவலையின் கணக்கில் உள்ளது. ஆனால் காலத்தின் ஞாபக சக்தி அப்படிப்பட்டதன்று மனிதன் தன் சக மனிதரோடு கொண்ட தொடர்பையும் பிரபஞ்சத்தில் மற்ற உயிர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் காலம் நினைவில் வைத்திருந்து ஒவ்வொரு கண்ணிமைப் பொழுதிலும் கணக்கை தீர்த்துக்கொள்ள அவனை வற்புறுத்துக்கின்றது. ஒவ்வொரு வாழ்வின் தொடர்ச்சியிலும் மரணங்களின் தொடர்ச்சியிலும் அது நிகழ்ந்து கொண்டே வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>