தன்னை அறிதல்

குரு உபதேசித்த வார்த்தைகளை எவன் மறந்து போவானோ அவன் நிச்சயமாய் நரகத்தில் வீழ்வான்!!

தேகத்தை சுத்தி செய்யவில்லை என்றால் தேகம் நிலையாக இருக்காது.

மூலத்தில் உள்ள குண்டலிணியை எழுப்பாமல் சிவமாக முடியாது.

தாயாரை பூஜிக்காவிட்டால் வித்தை பலியாது.

குருவை விட்டால் வித்தையின் சூட்சமத்தை அறிய முடியாது.

போதப் பொருளில் கலக்கவில்லை என்றால் மோட்சம் கிட்டாது.

மனதை அடக்கவில்லை என்றால் ஞானம் கிட்டாது.

ஆதார பூஜையை விட்டால் வாதம் பலியாது.

வாசியை அறிந்து கட்டவில்லை என்றால் கெவுனத்தில் செல்ல முடியாது.

மூலதாரத்தை மனதின் கண் கொண்டு வாசி வைத்து ஊதினால் ஆறாதாரங்களும் பிரகாசிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *