இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான்

யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!!

கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!!

 மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும்.

வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியாமூழ்கிபோய்விடும் என்று நீ கேட்கலாம்

                        இப்போது சொல்வதை கவனமாக கேள்.

5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும்.

பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.

அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது.

பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *