பதவி பூர்வ புண்ணியானாம்

நாம் ஜாதகம் எழுதுவதற்கு முன் எழுதக்கூடிய விஷயத்தில்வரக்கூடிய ஒரு வாக்கியம் இது. இதனுடைய அர்த்தம் என்ன?

முன்னோர்கள் இதை ஏன் சொன்னார்கள். எதனால் சொல்லியிருப்பார்கள். சிந்தித்துப் பார்த்ததில் கால புருஷனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியன் என்றாலே ஆளுமை, அதிகாரம், அடக்குதல் போன்றவை. கால புருஷனின் கர்மஸ்தானம், ராஜ்ஜியஸ்தானம், அதிகாரிஸ்தானம் மகரம். ஒரு மனிதனுக்கு நாடாளும் பதவியாக இருந்தாலும் சரி, கம்பெனிகளில் கிடைக்கும், மனேஜர் பதவி, டைரக்டர் பதவி, போன்றவை புது பூர்வ புண்ணிய வசத்தால் மட்டுமே அமையும். அப்படித்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது. மகரத்தில் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாகிய சூரியனின் நட்சத்திரமான உத்திராடம், 2, 3, 4 பாதங்கள் அமைகிறது. அதனால் தான் முன்னோர்கள் பதவி என்பது பூர்வ புண்ணிய வசத்தினால் தான் உண்டாகும் என்று நமக்கு சொல்லியிருக்கிறார்கள் போலும்.
உத்திராடம் 2, 3, 4 – ல் சூரியன் அமைந்தால் நிச்சயமாய் ஏதாவது ஒரு பதவி கண்டிப்பாக உண்டு. அது வார்டு செயலாளராகவோ , அகில இந்தியத் தலைவராகவோ அமையலாம். இது அவரவருடைய ஜென்ம லக்ன அமைப்புப்படி 10 – ம்மாதி இந்த உத்திராடம் 2, 3,4 பதவி கிட்டும். ஆனால் நிரந்தரமாக கடைசிவரை இருக்காது. கால புருஷ அமைப்புப்படியும் அது அமைந்திருந்தால் கடைசிவரை இருக்கும்.
ஜோதிட அன்பர்களே ஆராயுங்கள் ஆராய்ந்ததை பதிவிடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *