வேதாந்த சாஸ்திரம்-1

‘‘ ஸ்ரீ கணேச சாரதா சத்குரு தேவதாப்யோ நமோ நம
ஓம் ஸர்வாத்மகாய வேதாந்தபாஸ்கராய நம.
ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் நே § நானாஸ்தி கிஞ்சன,
ஸத்யம் ஸத்யம் புன–ஸத்யம் ப்ராஹ வேதாந்தபாஸ்கர.,

இந்த உலகம் முழுவதும் பரமாத்மனே ஆகியிருக்கிறது. பரமாத்மாவில் பேதம் எதுவுமில்லை.

1.இந்த அண்டம் முழுவதும் பரமாத்மனே.
ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
ஈசாவாஸ்யோபநிஷத்

இந்த உலகத்தில் இருக்கக் கூடியவையெல்லம் பரமாத்மனே எந்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சகல சாத்திரங்களின் சாரமே வேதங்கள், உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா தர்மநூல்களுக்கும் மூலமானவை வேதங்களேயாகும். இந்த வேதங்களுடைய சாரமே வேதாந்தம். இதுவே ‘ உபநிஷத் ’ என்பதேயாகும்.

பதினான்கு உபநிடதங்களில் முதலானதும், முக்கியமானதும் ஆகிய ஈசாவாஸ்யோபநிஷத்தின் முதல் மந்திரம் இதுவாகும். இந்த அண்டம் முழுவதும் பரப்பிரம்மத்தின் சொரூபமாகவே இருக்கிறது
.
அவித்யையினால் தோன்றும் நாமரூபங்கள் என்கிற உபாதிகளிலிருந்து உலகத்தில் பல்வேறு பேதங்கள், தாரதம்யங்கள், உயர்ந்தவை, தாழ்ந்தவை போன்ற வேறுபாடுகள் நமக்குத் தெரிகின்றன. ஆனால் இவை யாவும் உண்மை அல்ல- எவ்வாறு மகா ஆகாயம் பல்வேறு உபாதிகளினால் பலவித கூறுகளாகத் தோன்றினாலும் அவை யாவும் ஒரே ஆகாயமாக இருப்பது போல் இந்த உலகம் முழுவதும் பூரணமான பரப்பிரம்மமாகவே இருக்கிறது. இதுவே சகல வேதாந்தங்களின் கருத்து ஆகும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.735239_1681263115469660_41200303865094355_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *