வேதாந்த சாஸ்திரம் 2

ஓம் இந்த்ரியாகோசராய வேதாந்தபாஸ்கராய நம.

ந தத்ர சக்ஷ § ர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன,
ரூபசப்தாதிஹீனத்வாத் இதி வேதாந்தபாஸ்கர.
பிரம்மத்திற்கு உருவம், ஒலி முதலானவை இல்லாததால் பரப்பிரம்மத்தைக் கண்ணினால் பார்க்க முடியாது. வாக்கினால் வர்ணிக்க முடியாது, மனதினாலும் அறிய முடியாது.

2. இந்திரியங்களுக்கு வேலை இல்லை.
ந தத்ர சக்ஷ § ர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன ..
கேனோபநிஷத் 1 – 3
ஆத்மனைக் கண்ணினால் பார்க்க முடியாது, வாக்கினாலும் வர்ணிக்க முடியாது. மனதினாலும் சிந்திக்க முடியாது.

‘‘ கண்ணால் காண்பது மெய், காதால் கேட்பது பொய் ’’ என்னும் பழமொழி உலகத்திலிருக்கக் கூடிய எல்லா பொருட்களுக்கும் பொருந்தும். ஸ்தூலமாகிய கண்களால் பார்க்க முடியாததை நுண்கருவியினால் பார்க்க முடியும். மிகத்தொலைவில் இருக்கக்கூடிய நக்ஷத்திரங்களுக்குக் கண்கள் மட்டுமே பிரமானம்.

ஆத்மாவை எந்த இந்திரியங்களாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் ஆத்மாவுக்கு உருவம் இல்லை. உருவத்தை மட்டும் தான் கண்களால் தெரிந்து கொள்ள முடியும். ஒலி, தொடு உணர்ச்சி, சுவை, மணம் முதலானவற்றைக் கண்களால் தெரிந்து கொள்ள முடியாது
. அதனதன் விஷயங்களை மட்டுமே அந்தந்த இந்திரியங்களால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆத்மாவுக்கு ஒலி, முதலிய எந்த குணங்களும் இல்லாததால், இந்திரியங்களால் ஆத்மாவை அறிய முடியாது.
அனுபவத்தினால் மட்டும் தான் ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஓம் சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *