download (5)

வேதாந்த சாஸ்திரம் 3

ஓம் ஸத்தானரஹஸ்யவிதே வேதாந்த பாஸ்கராய நம. குதானாத் குத்ஸிதாம் கேஹீ கதிம் ப்ராப்னோதி து. க்கதாம், தஸ்மாத் ஸ § தானம் கர்தவ்யம் இதி வேதாந்தபாஸ்கர, கிரஹஸ்தனானவன் கெட்ட பதார்த்தங்களைத் தானம் செய்தால் நரகத்தை அடைகிறான். ஆகவே நல்ல வஸ்துக்களையே தானம் செய்ய வேண்டும். 3.

‘‘ கெட்ட தானத்தினால் நரகப் பிராப்தி அனந்தா நாம தே லோகா, தான் ஸ கச்சதி தா ததத், கடகோபநிஷத் 1 – 1 – 3 உபயோகமற்ற பசுக்களைத் தானம் பண்ணக்கூடியவன் ‘ அனந்தங்கள் என்கிற லோகங்களுக்குப் போகிறான். கடகோபநிஷத்தில் வருகிற ஒரு கதை. வாஜச்ரவஸ் எனும் முனிவர் ஒரு யக்ஞத்தைச் செய்தார். அந்த யக்ஞத்தைப் பரிபூர்ணமாக முடிப்பதற்காக அதில் பங்கு கொண்ட வேத வித்வான்களுக்கு, பலமற்ற மற்றும் வயதான மாடுகளைத் தானம் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட அவரது மகனான நசிகேதன், கெட்டதானத்தினால் நரக பிராப்தி என்பதை தந்தைக்கு விளக்கினான்.

தானம் செய்யும் பொழுது நம் மனம் சுத்தமாக இருக்க வேண்டும், தானம் செய்யப்படும் பொருட்களும் உயர்வானவையாக இருக்க வேண்டும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும், மனப்பூர்வமாகவும் தானம் செய்ய வேண்டும், இடம், காலம் மற்றும் பாத்திரங்களை அறிந்தும் தானம் செய்ய வேண்டும்.

அப்பொழுது தான் செய்த தானத்திற்குப் பலன் கிட்டும். அவ்வாறில்லாமல் ஸத்பாத்திரங்களுக்கு உபயோகமற்ற பொருட்களைத் தானம் செய்தால், செய்தவனுக்குப் பலன் கிடைக்காதது மட்டுமன்றி நரகமே கிடைக்கும். ‘‘ தினை விதைத்தவன் தினையே அறுப்பான் ’’ அல்லவா.

ஓம் சாந்தி சாந்தி….. சாந்தி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>