வேதாந்த சாஸ்திரம் 4

ஓம் முக்திமஹத்வவிதே வேதாந்தபாஸ்கராய நம.
ஜ்ஞானாதேவ ஹி கைவல்யம் நோபாஸனசதைரபி,
குருபதேசச்ரவணாத் ஜ்ஞானம் வேதாந்தபாஸ்கர,
கைவல்யம் ஞானத்தினால் மட்டுமே உண்டாகும். பலவித உபாஸனைகளினால் அல்ல. குருவினுடைய உபதேசத்தைக் கேட்பதால் ஆத்ம ஞானம் உண்டாகிறது.

4. சத்குரு சேவையினாலே ஞானப்பிராப்தி.
ஸ § ச பாரத்வாஜ, சைப்யச்ச ஸத்யகாம, ஸெளர்யாயணீ ச கார்க்ய, கௌஸல்யச்சாச்வ லாயனோ, பார்க்வோ வைதர்பி, கபந்தீ காத்யாயன, தே ஹைதே ப்ரஹ்மநிஷ்டா, பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா, ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்£பணய, பகவந்தம் பிப்பலாதம் உபஸன்னா.

பரத்வாஜனின் மகன் ஸ § கேசனும், சியின் மகன் ஸத்யகாமனும், ஸ ¨ ர்யனின் கார்க்கியனும், அச்வலனுடைய மகன் கௌஸல்யனும், ப்ருகுவின் மகன் வைதர்பியும், காத்யனின் மகன் கபந்தியுமாகிய இந்த அறுவரும் அபரப்பிரம்ம உபாஸனையில் நிஷ்டராக இருந்தனர். இவர்கள் பகவானாகிய பிப்பலாத மகரிஷியை —–
‘‘ இவர் மூலமாகவே பரப்பிரம்ம வித்யையை அறிய முடியும் ’’ என்றுணர்ந்து அவரை சமித்துகளுடன் அணுகினர்.
உபாஸானாநிஷ்டராகி அஷ்டஸித்திகளைப் பெற்ற போதிலும் சாதகன் ஜீவன்முக்தன் ஆகமாட்டான். ஆத்ம ஞானத்திலிருந்தே ஜீவன் முக்தி. ஸத்குரு சேவையும் அவருடைய உபதேச சிரவணமும் தான் ஆத்மஞானத்தைக் கொடுக்கும். கர்ம உபாஸனையின் பலன்கள் யாவும் செயற்கையானதால் அநித்யமே, முக்திநிலையே நம் நிஜஸ்வரூபம். அதுவே மனித குலத்தின் குறிக்கோள்.
ஓம் சாந்தி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *