யாருக்கு எங்கே பலம் ? -2

கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார். 7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.

களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும்

புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால்(முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.

உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.

சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும் அமர்ந்து இருப்பது மிகமிக உத்தமம்
இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.

இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன.

லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து இருந்தாலும் மேற்கண்ட வரிசைக் கிரமமே யோக லட்சணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *