வேதாந்த சாஸ்திரம் 7

ஓம் ஆர்ஷஜ்ஞானவதே வேதாந்தபாஸ்கராய நம.
அஹமேச பரம் ப்ரஹ்ம மத்த, ஸர்வம் ப்ரவர்த்ததே
த்ரிசங்கோர்ப்ரஹ்மநிஷ்டஸ்ய வசோ வேதாந்தபாஸ்கர,
நானே பரப்பிரம்மம் ஆகியிருக்கிறேன். இந்த அண்டசாரசரங்கள் எல்லாமே என்னாலேயே நடக்கிறது என்று திரிசங்கு மகரிஷி கூறுகிறார்.

7. திரிசங்குவின் உத்காரம்.
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா, கீர்த்தி, ப்ருஷ்ட்டம்
கிரேரிவ, ஊர்த்வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருத
மஸ்மி, த்ரவிணகம் ஸவர்ச்சஸம், ஸமேதா
அம்ருதோக்ஷித, இதி த்ரிசங்கோர்வேதானுவசனம்.
தைத்திரீயோபநிஷத் 1 – 10
தானே இந்த சம்சார மரத்தின் உயிர் நிலை. என்னுடைய பெருமையானது. உயர்ந்த மலையின் உச்சியைப் போன்று விளங்குகிறது. நானே மிகவும் பவித்தரமான ஆத்மா ஆவேன். ஆத்ம தத்துவத்தை உள்ளடக்கி இருக்கிறேன். இந்த அழிவற்ற ஞானமே என் செல்வம். இது பரிபூர்ணமான அமிருதம் போன்றது. இதுவே திரிசங்கு மகரிஷியின் அருள்வாக்கு.
ஆத் ஞானியான திரிசங்கு மகரிஷி இவ்வாறு கூறுகிறார். ‘‘ இந்த சம்சார மரத்திற்குக் காரணமாகியிருக்கிற பிரம்மமும் நானே ஆவேன் ’’. பிரம்மத்தைப் போலவே பிரம்ம ஞானியும் இந்த உலகத்திற்குக் காரணமாக இருக்கிறான். அவன் சூரியனைப் போல் ஒளி பொருந்தியும் சர்வ வல்லமையும் பெற்று விளங்குகிறான். இந்த அனுபவத்தை எல்லா பிரம்ம ஞானிகளும் உணர்கிறார்கள். தன்னையே பிரமமம் என்று உணர்ந்த பிரம்ம ஞானி பிரம்மத்தைப் போலவே சர்வாத்மன் ஆகிவிடுகிறான்.
ஓம் சாந்தி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *