வேதாந்த சாரம் – 8

ஓம் ஸர்வப்ராணிஸ்வரூபாய வேதாந்தபாஸ்கராய நம,
ஏகமேவ பரம் ப்ரஹ்ம ப்ரஹ்மாதித்யாத்யுபாதித,
பஞ்சபூதாதிரூபேண பாதி வேதாந்தபாஸ்கர,
இரண்டற்ற பரப்பிரம்மமே ஹிரண்யகர்ப்பன், ஸ ¨ ரியன், பஞ்ச பூதங்கள் எனப்படும் ரூபங்களிலும் காணப்படுபவன்.

8. ஸகல பிராணிகளும் பரப்பிரம்மமேதான்
ஏஷ ப்ரஹ்ம ஏஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதி, ஏதே ஸ்ர்வே
தேவா, இமானி பஞ்ச மஹாபூதானி, ப்ருதிவீ வாயு,
ஆகாச ஆபோ ஜ்யோதீம்ஷி இத்யேதானி இமானி ச
க்ஷ § த்ரமிச்ராணீவ, ஐதரேயோபநிஷத் 3 – 1 – 3
ஆத்மாவே அபரப்பிரம்மனும், இந்திரனும், பிரஜாபதியும், தேவதைகளும் ஆகியிருக்கிறான். பூமி, ஆகாசம், காற்று, அக்கினி, நீர் என்னும் பஞ்ச மகாபூதங்களுமாக இருக்கிறான். இவனே கீழான பிராணிகளிலும் இருக்கிறான்.
பிரஜ்ஞான சொரூபனாகிய ஆத்மாவே சகல பிராணி ரூபத்திலும் காணக்கூடியவன். உபாதிகளில் மட்டுமே, கீழானது மேலானது, உயர்ந்தது – தாழ்ந்தது போன்ற பேதங்கள் இருக்கின்றன. பிரம்மத்தில் பேதம் கிடையாது. ஆத்மா ஒன்றே. நாமரூபங்கள் மட்டுமே வேறு வேறு.
இந்த விசாலமான சிருஷ்டியின் முதலானவன் ஹிரண்யகர்ப்பன். இவனுக்குப் பிரம்மா என்றும் பெயர். இவன் தான் ‘‘ அபரம் ப்ரஹ்ம ’’ என்றும் அறியப்படுகிறான். மற்றும் வைச்வானரன், விராடபுருஷன் போன்ற பெயர்களால் அறியப்படுகிறான். இவனே நிஷமான பரப்பிரம்மமும் ஆகியிருக்கிறான். இந்த சிருஷ்டியிலுள்ள இந்திரன், தேவதைகள், மனிதர்கள், ராக்ஷஸர்கள், பசுபக்ஷிகள் முதலான யாவரும் பரப்பிரம்மமே.
ஓம் சாந்தி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *