வேதாந்த சாரம் – 9

ஓம் ப்ராணதத்வவிதே வேதாந்தபாஸ்கராய நம,
ப்ராணோபாஸனநிஷ்டானாம் ஸர்வதா விஜயோ பவேத்,
நாஸ்தி தேஷாம் பயம் கேப்யோ நூனம் வேதாந்தபாஸ்கர,
பிராணனை உபாஸனை செய்து நிஷ்டரானவர்களுக்கு எல்லா இடத்திலும் வெற்றியே, எவராலும் அவர்களுக்குப் பயம் கிடையாது.

9. பிராணோபாஸனையின் மகிமை.
யதா அச்மானம் ஆகணம் ருத்வா வித்வம்ஸதே, ஏவம்
ஹைவ ஸ வித்வம்ஸதே ய ஏவம்விதி பாபம் காமயதே,
யச்ச ஏனமேபிதாஸதி, ஸ ஏஷ, அச்மாகண,
சாந்தோக்யோபநிஷத் 1 – 2 – 8
ஒருவன் பெரிய பாறையைக் கையினால் உடைத்துப் பொடி செய்ய முயற்சித்தால், அவனுடைய கைகளே உடைகிறது. இதேபோல் பிராணோபாஸனை செய்பவர்களை அழிக்க நினைப்பவன்தானே அழிந்து போகிறான். பிராணோபாஸ்கன் பாறையைப் போன்று உறுதியானவன்.
உபாஸகர்கள் இஷ்ட தேவதைகளை உபாசனை செய்து அந்தந்த தேவதைகளின் அனுக்கிரகத்தைப் பெற்றுள்ளார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு, அருளல் மற்றும் சபிக்கும் சாமர்த்தியமும், திவ்யமான சக்தியும் உண்டாகின்றன.
செல்வம், அதிகாரம், கல்வி போன்றவைகளால் ஒருவன் சாமான்ய ஜனங்களை அடக்கி ஆளமுடியும், ஆனால் அவனால் ஒரு பிராணோபாசகனையோ, ஒரு தேவதா உபாசகனையோ அடக்க முடியாது. ஏனென்றால் பிராணோபாசைனையின் மகிமை எல்லா செல்வங்களுக்கும் மேலானது. இந்த உபாசனைகளினால் சகல சம்பத்துக்களும் கிடைக்கும். ஆனால் அவை யாவும் முக்கி ஆகாது.
ஓம் சாந்தி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *