வேதாந்த சாரம் 10

ஓம் ப்ரஜாபதிதத்த்வஸிதே வேதாந்தபாஸ்கராய நம,
ஸ்ருஷ்டே, பூர்வம் ஜகத் ஸர்வம் விராடேவ சராசரம்
புருஷஸ்து ஸ ஏவாத்ய ஜீவோ வேதாந்தபாஸ்கர
சிருஷ்டிக்கு முன் இந்த சராசராத்மகமான உலகம் முழுவதும், விராட புருஷனாகவே இருந்தது. அவனே இப்பொழுது ஜீவ ரூபத்தில் காணப் படுகிறான்.

10. விராட புருஷனின் மகிமை.
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் புருஷவித
ஆகியிருக்கிறது.
ப்ரஹதாரண்யகோபநிஷத் 1 – 4 – 1
இங்கே ஆத்மா என்றால், ப்ராஜாபதி என்கிற பிரம்மன். இவன் தான் புருஷவிதன். இப்பொழுது நாமரூபங்களினால், கூறுகளாகக் காணப்படக்கூடிய இவ்வுலகம் முழுவதும் ச்ருஷ்டிக்கு முன்னால் ஆத்மாவாகவே இருந்தது. இந்த ஆத்மாதான் விராட புருஷன். இவன் தான் ஹிரண்ய கர்ப்பனும் ஆகிறான்.
புருஷவிதன் என்றால் தலை, கை, கால், கண், காது முதலியவற்றோடு, சூட்சும ரூபத்தில் இருக்கக்கூடியவன். இவனிடமிருந்தே சகல புருஷர்களும் பிறக்கின்றார்கள். இவன் தன்னைத் தவிர மற்றொன்று இல்லை என்றும், தன்னை ‘ அஹம் ’ என்றும் தெரிந்து கொண்டதால் இவன் அஹம் நாமா அபவன் ( அஹம் எனப்படுகிறான் )
சிருஷ்டிக்கு முன் உண்மையில் இருந்தது ஆத்மாவேதான். ஆகவே இந்த பிரஜாபதி ரூபத்தில் இருப்பவனும் ஆத்மாவேதான். அதனால் இங்கு ஆத்மா என்றாலும் பிரஜாபதியைத் தான் குறிக்கும். அவனுக்கு அவ்யகிருத ஆத்மா என்றும் பெயர்.
ஓம் சாந்தி. சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *