வேதாந்த சாரம் 12

ஓம் ஸப்தஸர்வாத்மபாவாய வேதாந்தபாஸ்கராய நம,

ஆத்மஜ்ஙானபலாதேவ ஸர்வாத்மத்வமவாப்தவான்
வாமதேவமஹர்ஷிர்ஹி தீரோ வேதாந்தபாஸ்கர
தீரனாகிய வாமதேவ மகரிஷி ஆத்ம ஞானத்தைப் பெற்று சர்வாத்ம பாவத்தில் நிலைத்து இருந்தார்.

வாமதேவ மகரிஷியின் உத்காரம்.
தத்தைதத் பச்யன் ருஷிர்வாமதேவ, ப்ரதிபேதே
‘‘ அஹம் மனுரபவம் ஸ ¨ ர்யச்ச ’’ இதி
ப்ரஹதாரண்யகோபநிஷத் 1 – 4 – 10
அந்த பரமாத்மனே தன்னுடைய ஆத்மாவாகவும் இருக்கிறான் என்கிற சத்தியத்தை அறிந்து கொண்ட வாமதேவர், சூரியனும் நானே, மனுவும் நானே என்று அனுபவத்தில் கண்டு கொண்டார்.
வாமதேவ மகரிஷி ஆத்மஞானத்தைப் பெற்ற பிறகு கூறிய மந்திரம் இதுவாகும். ‘‘ அஹம் மனுரபவம் சூர்யச்ச ’’ இதுதான் சர்வாத்மபாவம்.
வாமதேவன் என்று ஒரு மகரிஷி இருந்தார். ‘‘ அஹம் ப்ரஹ்மாஸ்மி ’’ , நானே பிரம்மமாக இருக்கிறேன் என்று உணர்ந்தார். அத்தகைய ஆத்மஞானத்தைப் பெற்ற பிறகு ‘ நான் இந்த வெறும் தேகம் அல்லன், ரிஷிஹயம் அல்லன், அவயவங்கள் அற்ற பரிபூர்ணமாகிய பிரம்மம் நான் ’ என்று தெரிவிக்கிறார்.
இந்த பிரம்ம ஞானத்தினால் உண்டாகும் பலனே சர்வாத்ம பாவம் ஆகும். நானே மனு, நானே சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், ஆத்யாத்மிக, ஆதி பௌதிக, ஆதிதைவிகமான அண்டம் முழுவதும் நானே என்கிற அற்புதமான அனுபவத்தை வாமதேவ மகரிஷி உணர்ந்தவராகிறார்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *