ஓம் ஆத்மதர்சனரஹஸ்யவிதே வேதாந்தபாஸ்கராய நம
யேன சின்மாத்ரரூபேண சப்தாதீன் வேத்தி மானவ,
ஆத்மானம் தம் விஜானீயாத் இதி வேதாந்தபாஸ்கர
எந்த சின்மாத்ர சொரூபனிலிருந்து சப்தாதிகள் அறியப்படுகிறதோ அவனையே தன்னுடைய ஆத்மா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவை அறியும் கலை.
யேன ரூபம் ரஸம் கந்தம் சப்தான் ஸ்பர்சாம்ச மைது
னான், ஏதேனைவ விஜானாதி,
காடகோபநிஷத் 2 – 1 – 3
எதன் மூலமாக ஒருவன் காட்சி, சுவை, மணம், ஒலி, தொடுஉணர்ச்சி, மற்றும் உடல் இன்பத்தை அறிகிறானோ, அந்த ஆத்மாவே நான் என்று அறிய வேண்டும்.
இந்த மந்திரம் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளக்கூடிய கலையை உபதேசிக்கிறது. ஒவ்வொருவனும் தினமும், ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் முதலியவற்றை அறிகறி£ன் இல்லையா? இந்த அறிவு அவனுக்கு எவரிடம் இருந்து எவ்வாறு உண்டாகிறது? தேகம், இந்திரியங்கள், புத்தி இவை யாவும் அசேதனமானவை, அவ்வாறெனில் வெளியில் இருக்கக்கூடிய காட்சிகள் மற்றும் உள்ளே இருக்கக்கூடிய சுக துக்கங்களையும் அறியக்கூடியவன் யார்? அவன்தான் ஆத்மா.
உடல் முதலான ஸங்காதம் ( தொகுப்பு ) யாவும் அசேதனமாக இருப்பதால் இவற்றிற்கு ஒலி முதலியவற்றை அறிய முடியாது. இந்த ஸங்காதத்திற்கு வேறாக ஆத்மா இருப்பதினாலேயே இவற்றை நம்மால் அறிய முடிகிறது. இத்தகைய சின்மாத்திர சொரூபனாக இருக்கக்கூடிய ஆத்மாவே நான் என்று அறிந்தவனே ஆத்மஞானி. இதுவே, ஆத்மாவை அறியும் கலையாகும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.