திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -2

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

தென்றிசைக்கு ஒரு வேந்தன் – தென்திசையிலுள்ள யமபுரத்துக்கு ஒப்பற்ற அரசனாகிய யமனை. நாற்றிசை கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு. மேற்றிசை – நாற்றிசைகளிலும் உயர்ந்த (பரிசுத்தமான) திசை அல்லது மேலே சொல்லப்பட்ட நான்கு திசைகளுள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *