எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது-3

லக்கினத்தில் கேது இருந்தால் – வியாதியுடையவன், திரவியமுடையவன், விதிகளை தீர்க்க வகையறியவல்லவன், விஷப்பரீ¬க்ஷ பார்க்க வல்லவன், புத்திரனுள்ளவன் எளியன், அற்பாயுள்ளவனாக விருப்பான்.

 
லக்கினத்தில் சனியிருந்தால் -புத்திரவாதனையுண்டு, துர்ப்புத்தி, துர்விசாரன், ராஜகோளன், பெரியமனிதன், வாதசரீரன், உற்சாகமுடையவன், கிராமாதிகாரமுடையவன், வித்துவான், மௌனமுடையவன், ரூபவான், ரோகி, ஆட்சி உச்சாமாகில், ஞானவானுமாய் தனவானுமாய் தீர்க்காயுளுடையவன்
இலக்கினத்தில் சுக்கிரனிருந்தால் – அதிகாரமுடையவன், கணிதமுடையவன், வாசனையுடையவன், பெண் சாதிப்பிரியன், வஸ்திர அலங்காரப்பிரியன், சந்தன புஷ்பப்பிரியன், காமப்பிரியன், சுகசரீரன், நேத்திர அழகுள்ளவன், தீர்க்காயுளுண்டு
லக்கினத்தில் வியாழனிருந்தால் – தன் வீட்டிலே «க்ஷமமுண்டு, தர்க்க சாஸ்திரமறிவான், புத்திமான், சுகமுடையவன், சேனாதிபதி, இராசபூச்சியன், சதுரங்கவுபாயன், அழகுண்டு, ஞானி, தீர்க்காயுள்
லக்கினத்தில் புதனிருந்தால் – சரீர பூஷணன், மந்திராலோசனை உச்சாடனமுள்ளவன், பந்துக்கள் உண்டு, சோதிட சாஸ்திரம் அறிந்தவன், வித்தையுண்டு, காவிய கணிதமுடையவன், ஞானவான், இராஜசன்மான- முடையவன், தனவான், வாக்சாலகன், தீர்க்காயுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *