எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள்-2

இலக்கினத்திற்கு இருபுறமும் சுபர் நிற்க,
இராஜ யோகம்,
இருபுறமும் பாபர் நிற்க தரித்திரயோகம் –

தனவீன முடையவன், துஷ்டன், பிரதேசங்களில் ஜீவனம் – பண்ணுவான். அற்ப வயதுள்ளவன்.

இலக்கினத்தில், சூரியனிருந்தால் – பயித்திய சரீரம், ஆரோக்கியவான், சூரத்துவமுண்டு கொஞ்சம் நேத்திர யோகம்

லக்கினத்தில் சந்திரனிருந்தால் –
கண் உன்னதமானது வியாதியுள்ளவன், மூக்கில் ஜலம் வடியும், நீர் விழுரோகமுண்டு, பெண்கள் சகோதரமுண்டு, வாதசரீரம், பயிர் செய்வான், கண்டத்தில் ரோகமுண்டு, குய்யத்திலே வியாதியுண்டு, கொஞ்சம் கருணை, ரோகம், தயாபரன், தீர்க்காயுள், ஞானியாயிருப்பான்.

லக்கினத்தில் செவ்வாயிருந்தால் – சரீர உஷ்ணம், மேகசரீரம், திருட்டு புத்தி, கழுத்து பெரியதாயிருக்கும், சிவந்த சரீரன், பாலவயதில் பிதிருக்குப் பீடையுண்டு, ராஜ சாமர்த்தியன், கோபமுடையவனாகவும் படிப்பில்லாதவனாகவுமிருப்பான்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, மகரம் இராசிகளில் ராகுவிருக்கிறபோது பிறந்தால் யோகவான்

போகியாயிருப்பான், தயையுள்ளவன், தீர்க்கபுத்தி, ஸ்திரீவாஞ்சை, தன் குலத்திற்கு பிரபலமாயிருப்பான்,

செவ்வாய் சந்திரன் கூடி நிற்கில் மாதுர்தோஷம்,

சூரியன், செவ்வாய், சனி கூடி நிற்கில் பிதாவுக்கு தோஷமுண்டு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *