சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
சிவனுடன் ஒப்பான ஒரு தெய்வத்தை ஆண்டுத் தேடினும் காண்டல் இல்லை. அவனுடன் ஒப்பாரை ஈண்டுங் காண்டல் இல்லை. எனவே, யாண்டும் யாவரும் அவனுக்குத் தாழ்ந்தவரே. அனைத்துலகங்களுக்கு அப்பாற்பட்டுப் பொன்போல் விளங்காநின்ற பின்னுதலையுடை தீவண்ணச் செஞ்சடையுடன் திகழ்கின்றான். மெய்யன்பர்களின் அன்பால் விளங்கும் நெஞ்சத் தாமரையைத் துய்ய வைப்பாகக் கொண்டு உறைகின்றனன் சிவன்