வேதாந்த சாரம் 14

ஓம் ஸ்வஸ்வரூபநிஷ்டாய வேதாந்தபாஸ்கராய நம,

ச்ரத்தாவான் ஆத்மகாமச்ச தத்பரச்ச ஜிதேந்த்ரிய
ஜிஜ்ஞாஸ § ர்லபதே ப்ரஹ்ம பரம் வேதாந்தபாஸ்கர,
சிரத்தையுள்ளவனும், ஆத்மாவையே அறிய விரும்புபவனும், தத்பரனும், இந்திரியங்களை வென்றவனும் ஆகிய ஜிஜ்ஞாஸ ¨ பரப்பிரம்மத்தை அடைகிறான்.
இத்கையவனுக்கே ஆத்மா கிட்டும்.
யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய, தஸ்யைஷ ஆத்மா
விவ்ருணுதே தனும் ஸ்வாம், முண்டகோபநிஷத் 3-2-3
எந்த ஜிஜ்ஞாஸ § ஆத்மாவையே அடைய ஆவலுடனும், தீவிர முயற்சியுடனும் இருக்கிறானோ, அவனுக்குக் தான் ஆத்மா கிட்டுகிறது. அவனுக்கே ஆத்மா தன் நிஜ சொரூபத்தைக் காண்பிக்கிறான்.


யாருக்கு ஆத்ம ஞானம் கிடைக்கக்கூடியது? ஆத்ம ஜிஜ்ஞாஸ § களுக்கு, மட்டுமே, யார் எதை வேண்டி தீவிர முயற்சி செய்கிறார்களோ, அவர்களுக்கு அவை கிடைக்கிறதல்லவா? தனக்கு வீட்டை வேண்டுபவன் வீட்டையும், புகழை வேண்டுபவன் புகழையும், செல்வத்தை வேண்டுபவன் செல்வத்தையும், சொர்க்கத்தை வேண்டுபவன் சொர்க்கத்தையும் அடைகிறானல்லவா? அது போல் தன் ஆத்மாவையே அறியவேண்டும் என்கிற தீவிர சிரத்தையுள்ளவன் ஆத்மாவையே அடைகிறான்.


ஆத்மாவை அறிவது என்றால் என்ன? தன் நிஜ சொரூபத்தை அறிவதே. பிறப்பு, இறப்பு மற்றும் அழிவும் இல்லாத, உபநிஷத்துகளில் கூறப்படும் ஆத்மாவை அறிய எல்லா முயற்சிகளையும் செய்பவனே முமுக்ஷ § என்று அழைக்கப்படுகிறான். இத்தகையவனுக்கே சத்குருவின் உபதேசத்தில் மூலம் ஆத்ம தரிசனம் உண்டாகிறது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *