வேதாந்த சாரம் 15

ஓம் ஸ்வாராஜ்யாபிஷிக்தாய வேதாந்தபாஸ்கராய நம,

வ்யாஹ்ருத்யுபாஸனாத் தீர, ஸ்வாராஜ்யம் பலமச்னுதே
வாக்பதிச்ச மனஸ்வீ ச பவேத் வேதாந்தபாஸ்கர,

வியாகிருதிகளை உபாஸனை செய்யக் கூடிய தீரன் வாக்பதியும், மனஸ்வியும் ஆகிய ஸ்வாராஜ்யம் என்ற பலனை அடைகிறான்.

15. ஸ்வாராஜ்யத்தை அடைவதற்கான வழி.

ஆப்னோதி ஸ்வராஜ்யம், ஆப்னோதி மனஸஸ்பதிம்
வாக்பதிச்சக்ஷஷ்பதி, ச்ரோத்ரபதிர் விஜ்ஞானபதி
தைத்திரீயோபநிஷத் 1 – 6
வியாகிருதிகளை உபாஸனை செய்யக் கூடியவன் ஸ்வாராஜ்யத்தை அடைகிறான். மனதிற்கும், வாக்கிற்கும், கண்களுக்கும் அதிபதி ஆகிறான். ச்ரோத்திரங்களுக்கும், விஜ்ஞானத்திற்கும் அதிபதி ஆகிறான்.

பூ, புவ., ஸ § வ., மஹ, என்ற நான்கு வியாஹ்ருதிகளை இந்த லோகம், அந்தரிக்ஷ லோகம், சொர்க்க லோகம் மற்றும் ஆதித்ய லோகம் என்று கிரமமாய் உபாஸனை செய்பவருக்கு ஸ்வாராஜ்யம் கிடைக்கிறது. மஹ, என்ற வியாகிருதியை பிரம்மம் என்று உபாசனை செய்ய வேண்டும்.
இத்தகை வியாஹ்ருதிகளை உபாசனை செய்கிறவன், ஸ்வாராஜ்யத்தை அடைந்து வியாஹ்ருதிகளுக்கும் ஆம்மாவாகி, விராட் புருஷனை போலவே ஸ்வராட் ஆகிறான். இவன் தனக்கு வேண்டியவற்றை மட்டும் அன்றி மற்றவர்களுக்கு வேண்டியவற்றையும் கொடுக்க வல்லவன் ஆகிறான். மனம், வாக்கு, கண்கள், செவிகள் மற்றும் விஞ்ஞானம் முதலியவற்றின் தலைவனும் ஆகி அஷ்டமகா சித்திகளையும் பெற்றவனாகிறான்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *