download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -5

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.

அச் சிவபெருமான் திருவாணை ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் முத்திறப்புணர்ப்பானும் ஆருயிர்களைப் பொருந்தும். அங்ஙனம் பொருந்தாவிடின் அமரர். எவர்க்கும் வாழ்வில்லை. அவன் அருள் துணையின்றிச் செய்யப்படும் அருந்தவங்கள் ஏதும் இல்லை. அவனருள் இல்லாமல் அயன், அரி, அரன் என்னும் மூவரால் நடக்கக்கூடியது ஒன்றும் இல்லை. அவன் திருவருளில்லாமல் வானோர்க்கு உயர்ந்த உலகமாகிய பேரின்பத் திருவூர்புகும்வழி ஒருவராலும் உணரவொண்ணா தென்க.

அவன்: சேய்மைச் சுட்டு; பண்டறிசுட்டுமாம். சேய்மைச் சுட்டு உண்மையும், பண்டறிசுட்டுப் பொதுவுமாம்; பொது ஈண்டுச் சார்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>