download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -7

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

தீயைக் காட்டிலும் மிகவும் வெப்பம் உள்ளவன். இந்நிலை அறிவாய்த் தனியாய் நிற்கும் கழி நிலை. புனலைவிடக் குளிர்ந்தவன். இந்நிலை அருளுடன் கூடி அனைத்துயிரையும் இயக்கியாளும் வழிநிலை. ஆயினும் அவன்தன் அருள் நிலையினை உள்ளவாறு அறிவார் ஒருவரும் இலர். சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும் அறியப்படாத சேய்மையனாயினும் நல்லன்பர்களுக்கு அணியனாய் நின்று என்றும் நன்மை செய்பவன். பால் நினைந்தூட்டும் தாயினும் இனியன். தாழ்ந்த திருச்சடையை உடையவன். கழிநிலை – கடந்த நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>