download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -8

பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப் படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப் படுவார் இல்லை தானே.

பொன்னால் பின்னி அழகுற அமைக்கப்பட்ட திருச்சடையென்று வழுத்தும்படியாகப் பின்னால் விளங்கும் சடையுடன் வீற்றிருந்தருள்பவன். அவன் திருப்பேர் நந்தியங் கடவுள் என்று சொல்லப்படும். அடியேனால் தொழப்படும் எம் தலைவன். அத்தகைய சிவன் யாரையும் தொழுவானல்லன். எல்லாரும் அவனையே தொழுவர். அதனால் தன்னால் தொழப்படுவார் இல்லை யென்றருளினர். இதுபற்றியே ‘சேர்ந்தறியாக் கையானை’ என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருமறை முடிவும் (திருவாசகம்) அருளிற்றென்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>