download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -9

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே

வேறிடத்தும் பக்கத்தும் யாவற்றிற்கும் காரணமாம் சிவ பெருமானை அவனருளால் ஆராயின் அவனுடன் ஒத்து விளங்கும் பெரிய முழுமுதல் தெய்வம் யாதொன்றும் இல்லை. அவன் திருவடியுணர்வு கொண்டு சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையால் அடைய முயலும் முயற்சிக்கண் அவன் துணைபுரிந்து வெளிப்பட்டருள்வன்; முடிவிலும் அங்ஙனே திகழ்ந்தருள்வன்; அதனால் அவன் வேண்டுங்காலத்துப் பொய்யாது பெய்யும் அருண்மழை முகில் போல்வன். அவன் திருப்பேர் நந்தி என்ப.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>