திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -10

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.

எந்நாளும் அவனருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் ‘சிவ சிவ’ என்று; இடையறாது ஏத்துகின்றேன்; இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன்; அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன்; அவன் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றலொளியாய்த் திகழும் ஓங்கொளிவண்ணன்; எம் தலைவன்; இயல்பாக விளங்கும் உண்மையறிவின்பப் பேரொளி வண்ணன்; குறைவிலா நிறைவாய்க் கோதிலா அமிழ்தாய்த் திகழும் முறையுறும் முதல்வனாவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *