4

வேதாந்த சாரம் 17

ஓம் ஆலோசனபராய வேதாந்தபாஸ்கராய நம,

ஜகத, காரணம் ப்ரஹ்ம கிம் ஜீவா, கதமாகதா,
சிந்தயந்தி முதா ப்ரஹ்மவிதோ வேதாந்தபாஸ்கரா,

இந்த ஜகத்திற்கு பிரம்மம் எப்படிக் காரணமாயிருக்கிறது? ஜீவர்கள் எப்படிப் பிறந்திருக்கிறார்கள்? இதை பிரம்ம ஞானிகள் உற்சாகத்துடன் சர்ச்சை செய்கிறார்கள்.

17. ஞானிகளுடைய சர்ச்சை.

ப்ரஹ்மவாதினோ வதந்தி, கிம் காரணம் ப்ரஹ்ம குத
ஸ்ம ஜாதா, ஜீவாம கேன க்வ ச ஸம்ப்ரதிஷ்டா, அதி
ஷ்டிதா, கேன ஸ § கேதரேஷ § வர்தாமஹே ப்ரஹ்ம
விதோ வ்யவஸ்தாம்
ச்வேதாச்வதரோபநிஷத் 1 – 1
பிரம்மஞானிகள் இவ்வாறு சர்ச்சை செய்கின்றனர். இந்த ஜகத்திற்குப் பிரம்மம் காரணமா? நாங்கள் எதிலிருந்து பிறந்திருக்கிறதோம்? எதனால் ஜீவித்திருக்கிறோம்? எங்கு போய் சேருவோம்? சுகதுக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்? உலகின் நடைமுறை எவ்வாறு அமைகிறது?

இந்த மந்திரம் நமது பழமையான பாரதீய ஸம்பிரதாய மகிமையைத் தெரிவிக்கிறது. முன் காலத்தில், ரிஷிகள் தபஸ்விகள், சந்நியாசிகள், மகாத்மாக்கள் ஒன்று சேரும் போது பரப்பிரம்ம விஷயத்தையே சர்ச்சை செய்தார்கள். லௌகீக விஷயங்களைப் பற்றிய விசாரம் செய்யவில்லை.
ஆத்ம விசாரத்திலிருந்து ஆனந்தம் கிடைக்கிறது. பரமாத்மவைப் பற்றிய விசாரத்திலிருந்து நமது அஞ்ஞானம் விலகுகிறது. வேதாந்தங்களில் பிரம்ம விசாரமே செய்யப்பட்டிருக்கிறது. உலகத்திற்கும் பிரம்மத்திற்கும் உண்டான உறவு நமக்கும் பொருந்தும். பரப்பிரம்ம விசாரத்திலிருந்து தான் இந்த உலகத்திற்குக் கல்யாணம், சாந்தி மற்றும் ஆனந்தம் கிடைக்கிறது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>