வேதாந்த சாரம் 18

ஓம் ப்ராணோபாஸனமர்மவிதே வேதாந்தபாஸ்கராய நம,

ப்ராணோபாஸனநிஷ்டானாம் ப்ராணதத்த்வவிதான் ஸதாம்,
ஸாபேக்ஷிகம் ஹ்யம்ருதத்வம் இதி வேதாந்தபாஸ்கர,

பிராணனுடைய தத்துவத்தைத் உணர்ந்து, பராணோபாசனை செய்பவர்களுக்கு அமிருதத்துவம் கிடைக்கிறது.

18. பிரணோபாசனையின் இரகசியங்கள்.

உத்பத்திமாயதிம் ஸ்தானம் விபுத்வம் சைவ பஞ்சதா,
அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாம்ருதம ச்னுதே,
ப்ரச்னோபநிஷத் 3 – 12

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், வியாபகத்துவம் மற்றும் ஐந்து வித தூல வெளிப்பாடுகள் ஆகியவற்றை அறிந்தவன் மரணமற்ற நிலையை அடைகிறான்.
பிராணோபாசனையினால் அமிருதத்துவம் கிடைக்கிறது. பிராணோபாசனையுடைய ஐந்து அம்சங்களானவை —
1. பிராணன் தன் மூல காரணமாகிய ஆத்மனிலிருந்தே பிறந்து ஆத்மனிலேயே இருந்து ஆத்மனிலேயே ஒன்றாகிவிடுகிறான்.
2. மனதின் மூலமாக பிராணன் இந்த தேகத்தை அடைந்து, பிறகு சரீரம்
முழுவதும் பரவியிருக்கிறான்.
3. இந்தக் காரிய கரண கூட்டணிகளில் எல்லாம் நிறைந்து, உள்ளும்
வெளியும் இருக்கிறான்.
4. பிராணன் இந்திரியங்களை எல்லாம் பரவி, தான் ஒருவனே அனேக
உருவங்களில் தோன்றுவதால் விபு எனப்படுகிறான்.
5. குறி, குதங்களில் அபானனாகி, கண், காது, முகம், மூக்கில்
பிராணனாகி தொப்புளில் ஸமானனாகி இருக்கக்கூடிய பிராண
உபாசனையினால் பிராண ஸாயுஜ்யம் கிடைக்கிறது.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *