வேதாந்த சாரம் 19

ஓம் ம்ருத்யுபயவிதூராய வேதாந்த பாஸ்கராய நம,

சப்தரூபாதிஹீனம் தத் நிர்விசேஷம் நிரம்சகம்,
ஆத்மானம் யோ விஜானீயாத் முக்தோ வேதாந்தபாஸ்கர,

ஆத்மா ஒலி முதலிய, ஐந்து விஷயங்கள், குணங்கள், கூறுகள் அற்றவன் என்பதை உணர்ந்தவன் முக்தனாகி விடுகிறான்.

19. மரணத்திலிருந்து விடுதலை.
நிசாய்ய தத் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே,
காடகோபநிஷத் 1 – 3 – 15

உபாதிகளற்ற அந்த தத்துவத்தைத் தெரிந்து கொண்டவன்
மரணத்தின் பிடியிலிருந்து முக்தனாகிறான்.

ஆத்மனை அறியவேண்டும். ஆத்மனை அறிவதன் பலன் என்ன? முக்திதான் பலன், முக்தி என்றால் விடுதலை. எதிலிருந்து? மரணத்தின் பிடியிலிந்து, மரணம் என்ற சொல்லே நமக்குப் பயத்தைத் தரக்கூடியது, மரணத்தைப் பற்றிய விசாரம் அமங்களமானது என்று சொல்கிறார்கள். மேலும் மரணத்திலிருந்து விடுதலை கிடைத்தால் எத்தனை சௌபாக்யிம் இது யாருக்கு வேண்டாம்?
மரணத்திலிருந்து விடுதலை பெறுவது எல்லோருக்கும் சாத்தியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மா எப்படி இருக்கிறான்? இதை வேதம் இப்படி உபதேசிக்கிறது. ஆத்மாவுக்கு ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, மணம் முதலானவையும், தேகம், இந்திரியம், மனம், புத்தி, பிராணன் ஆகியவையும் இல்லை. ஆத்மா நித்ய சுத்தன், நித்ய புத்தன், நித்ய முக்தனாக இருக்கிறான். ஆத்மா எல்லா மாறுபாடுகளுக்கும் சாட்சியாக இருக்கிறான். மாறுதல்கள் இல்லாத நிலையான ஆத்ம தத்துவத்தை அறிந்தவனுக்கு மரணபயம் உண்டா?
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *