11

வேதாந்த சாரம் 20

ஓம் ப்ரஹ்மிஷ்டாய பலிஷ்டாய வேதாந்தபாஸ்கராய நம,

வித்யாபலவிஹீனானாம் துர்லபம் ப்ரஹ்ம தத் பரம்
புத்ரபத்னீப்ரமத்தானாம் ஸத்யம் வேதாந்தபாஸ்கர,

ஆத்மஸித்யையின் வலிமை இல்லாமல், குடும்பவாழ்க்கையில் திளைத்திருப்பவனுக்கு பரப்பிரம்மத்தை அறியமுடியாது.

20. வலிமையற்றவனுக்கு ஆன்மா இல்லை.

நாயமாத்மா பலஹீனேன லப்யோ ந ச ப்ரமாதாத்
தபஸோ வாப்யலிங்காத்
முண்டகோபநிஷத் 3 – 2 – 4
இந்த ஆத்மா வலிமை அற்றவனுக்குக் கிடைக்க மாட்டான். கவனமின்மையாலோ அல்லது சின்னமற்ற தவம் மேற்கொள்வதாலோ, ஆத்மா கிடைக்க மாட்டான்.

பலஹீனன் என்றால் வலிமையற்றவன். வலிமை என்றால் தைரியம். இது உடலின் சக்தியோ அல்லது புத்தியினுடைய சாதுரியமோ அல்ல. விவேகத்தின் வலிமை. ஆத்ம ஞானத்தின் வலிமை. மற்ற வலிமைகளெல்லாம் வலிமைகள் அல்ல. அவற்றிலிருந்து ஆன்மாவை அடையமுடியாது.
பிரமாதம் என்றால் லௌகீக பொருட்களின் மீது உண்டாகும் விசேஷமான பற்று. இத்தகைய உலகப்பற்று உள்ளவனுக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது. ஏனென்றால் இவனுக்கு ஆத்மஞானத்தின் மகிமை தெரியாது.
விவேகம், ¬ராக்யம், இல்லாமல் வெறும் நூலறிவால் ஆத்ம ஞானம் கிடைக்காது. ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மிகவும் புத்திசாலியாகவோ, சக்தியுள்ளவனாகவோ, பண்டிதனாகவோ இருக்த் தேவையில்லை, இதனால் செல்வங்கள் கிடைக்குமே தவிர முக்தி கிடைக்காது. மனிதன் பல துறைகளில் வலிமையுள்ளவனாக இருந்தாலும் அவன் அஞ்ஞானியாக இருந்தால் வலிமையற்றவனே.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>