திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து-11

கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலிதேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறிய கிலார்களே.

நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் அன்பு செய்யும் ஆருயிர்கட்கு அருள்புரிய வேண்டும் என்னும் ஒப்பில்லாத தனிப்பெருங் காதலுடன் என்றும் ஒருபடித்தாய் அழிவின்றி நிற்பன். அவன் அவ்வாறு நிற்கவும் அளவில்லாத தேவர்கள் என அவன் ஆணையால் சிறப்புப் பெற்ற ஆருயிர்கள் மலப்பிணிப்பால் வினைக்கீடாய் மாயாகாரிய உடம்புகளுடன் பிறந்திறந்து வருவதே தொழிலாய் ஒழிந்தனர். அங்ஙனமிருந்தும் மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் என்றும் அழியா இயற்கைசேர் அண்ணல் சிவபெருமானே என்று அறியாது தடுமாறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *