திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -12

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே

மால் வஞ்சனையாற் சென்று மாவலிபால் மூன்றடி மண் வேண்டி அவன் புனலுடன் பூச்சொரிந்து தரப்பெற்றுத் தன் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்து மற்றோரடிக்கு அவன் தலையில் அடி வைத்து அழுத்தி அவனை அழித்தனர் என்ப. அத்தகைய மாலும் மலரோனாகிய நான்முகனும் ஏனைத் தேவர்களும் தங்கள் தங்கள் மனத்தாலும் கருதிச் சிவனை நினைக்கும் ஆற்றலில்லாதவராவர். அச் சிவன் ஆருயிர்களின் நெஞ்ச வெளியினையும் அளந்து அப்பாற்பட்டவன் ஆவன். தன் திருவுள்ளமாகிய கருத்தளவானே எல்லாவற்றையும் தந்தருளுதலாகிய அளத்தலைச் செய்து கலந்தும் கடந்தும் நிற்பவனும் அச் சிவனே. கண் – கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *