திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -18

இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூது அறிவாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி ஆக அமருகின்றானே

மணங் கமழாநின்ற ஏழுலகமும் சிவபெருமானின் உடைமைப் பதியாகும். இவற்றினும் சிறப்பாகப் பேரொடுக்கக் காலத்துத் தோன்றும் சுடுகாடாகிய முதுபதியினையே தன் இருப்பிடமாக அமைத்துக் கொண்டவன், இயற்கையுணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த மூதறிவுசேர் பேரறிவாளன் அவன்; ஆயினும் திருவருள் துணையால் திருவடியுணர்வால் தன் நெஞ்சினை அச் சிவனுக்கு இருப்பிடமாக அமைக்கும் நற்றவத்தோர் உள்ளமே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *