திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -19

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே

ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி – அறிவின் அடையாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *