திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -23

வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் எயன நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளு கின்றானே

சிவனுக்கே உரிய எண்குணங்களுள் முடிவிலாற்றலு மொன்றாதலின் அவன் எல்லாம் நினைப்பளவானே எளிதின் முடிக்கத் தகுந்த வியத்தகு பேராற்றல்சேர் வல்லவன் – சிவன். தீக்கடவுளைக் கடலின் நடுவாகக் கடல்நீர் மிகுந்து மேலேறா வண்ணம் ஆணையும் ஆற்றலும் ஈந்து நிறுத்தி வைத்தனன். இதுவே அறமுறையாகும். அத்தகைய ஆண்டவனை அன்பிலார்க் கறிய வொண்ணாமை பற்றி இல்லை என வேண்டா. தேவர்கள் முதல் யாவர்களுக்கும் முதல்வன். அல்லும் பகலும் என்னும் வேறுபாடின்றி இடையீடின்றி எப்பொழுதும் அருள் செய்கின்றான். வாரணம் – கடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *