தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே
ஆருயிர்களைப் புறம்புறம் திரிந்து என்றும் தொடர்ந்து நிற்கின்றவன் சிவன். அச் சிவனை அன்புடன் திருமுறைவழித் தொழுங்கள். தொழுதால் இடையறாது யாண்டும் இணைந்து நிறைந்து நிற்பன் சிவன். அனைத்தையும் சுமக்கும் நிலமுதல் மெய்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் சிவன். ஆருயிரின் நெஞ்சத் தாமரைமேல் உடங்கிருந்தருளினன். அத்தகைய சிவபெருமான் திருவடியினைத் தொழுவதே அழிவில் சிவ புண்ணியமாகும். மெய்கள் – தத்துவங்கள்.