திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -28

இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமரா பதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே

எங்கும் இணக்கத்துடன் நிறைந்து நின்றவனும் அங்ஙனம் நிற்பினும் அருட்கண் பெறாதார்க்குத் தோன்றாது பிணங்கி மறைந்து நிற்பவனும் சிவனே. உலக ஒடுக்கத்துக்குப் பின்னும் உலகத் தோற்றத்திற்கு முன்னும் நிற்பவனும் சிவனே. உயிர்க்குயிராய் நுணுகுதலாகி உணக்கத்துடன் நிற்பவனும் சிவனே. அவன் துறக்க வுலகத்துக்கு முதல்வன். வணங்கி வழிபட்டு நிற்பார்க்கே வழித்துணை யாவன். துறக்கவுலகம் ஈண்டுக் கயிலாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *