குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. – 28

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பரிமேலழகர் உரை:
நிறைமொழி மாந்தர் பெருமை – நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் – நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். (‘நிறைமொழி’ என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).
Translation:
The might of men whose word is never vain, The ‘secret word’ shall to the earth proclaim.
Explanation:
The might of men whose word is never vain, The ‘secret word’ shall to the earth proclaim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *