download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -29

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே

சிவபெருமானே, அடியேன் காணுமாறு வெளிப்பட்டருளாய். அடியேனுக்கு உன்னையன்றி வேறு உறவாவார் யாருளர்? நீ வெளிப்படின், உன்னை யான் அகந்தழுவுவதுபோல் புறந்தழுவுவதிலும் நாணுற்றுப் பின்னில்லேன். மனக்கோட்டம் சிறிதுமில்லாத அருட்பண்பு பெரிதும் செறிந்த செந்நெறிக் குணத்தடியார் நல்லுளத்தில் உயிர்க்குயிராய் நிற்பவன் சிவன். ஆதலால் அவன் அச்சாணியன்னானாகி அமர்ந்தருளுகின்றனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>