download (12)

திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -31

மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.

மண்ணகத்தும் வானகத்தும்விண்ணகத்தும் முறையே வாழ்வார் மக்கள், தேவர் முதலியமூவர், அருளோன் முதலிய ஐவர் ஆவர். அவரவர்களுக்கு வேண்டுவனஅருளுவதால் அவரவர்களை ஒப்பவன்போல் தோன்றுவன்.ஆயினும் அவன் அவர்களனைவர்களையும் இரும்பைப்பொன்னாக்கும் குளிகையனைய வேதகத்தானாவன். அவன்செந்தமிழ்ப் பண்ணகத்து இன்னிசை போன்றுள்ளவன்.அப் பாடலினை ஏற்று அளவிலா மகிழ்வு பூப்பவன். அவன்என் அறிவின்கண்ணே நிறைந்து நிற்கின்றான். யானும்அவனருளால் அவ் வறிவின் கண்ணேயே காதலிக்கின்றேன்.மூவர்: அயன், அரி, அரன்; ஐவர்: ஆசான், ஆண்டான்,அருளோன், அன்னை, அத்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>