திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -32

தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

சிவபெருமான் தேவர்கட்கு முதல்வன்;எளியோமாகிய நமக்குத் தலைவன். பத்துப் புலங்களையும்கலப்பால் ஒன்றாய்ப் பொருந்தியிருக்கும் தலைவன்.கடலால் சூழப்பட்ட ஏழுலகையும் பொருட்டன்மையால்கடந்து நிற்கும் கடவுள். இத்தகைய அவன்றன் வியத்தகுதன்மையை உள்ளவாறு உணர்வாரில்லை. செலுத்துந் தன்மையால்எங்கும் நிறைந்து விளங்கும் அச் சிவனைச் செந்தமிழ்ப்பாடல் பாடித் தொழுவோமாக. புலம் – திசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *