திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -33

பதி பல ஆயது பண்டு இவ் உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே

வேற்றுப் புலத்தார் தெய்வங்களைத் தெளிவுணர்வின்மையால் பலவாகக் கொண்டு வழிபடுவர். இது தொடக்க காலத்து உலக மக்களின் செய்கை. வேள்வியென்னும் பெயரான் கொன்றாகும் கடைச்செயல் பலவும் புரிவர். அதற்குக் காரணம், அவர்கட்குப் பெறவேண்டிய மெய்யுணர்வு சிறிதும் இல்லாமையேயாம். முழுமுதற் சிவனையொழித்து, ஏனைய உயிரினங்களாகிய தேவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடுவர். அப்பாட்டுப் பாடுவாரும் தெய்வவுணர்விலாதவராவர். அதனால் அவர்கட்குப் பிறப்பு இறப்பு நீங்காமையால் துன்புற்று உள்ளம் வாடுவர். விதி: ஆகுபெயராய் வேள்வியைக் குறித்தது. ஒன்றும் – சிறிதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *