திருச்சிற்றம்பலம்

தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்து எந்தையாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்யா மார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியால் அடியாரோடும் மேன்மேலும் குடைந்தாடி ஆடு வோமே.
-திருவாசகம்

தெளிவுரை :

மகாதேவனைத் தேவேந்திரன் அறியமாட்டான். மும்மூர்த்திளுக்கும் அவனே தலைவன். தோன்றியுள்ள அனைவர்க்கும் அனைத்துக்கும் அவனே முதற்பொருள். உமாதேவியாரை ஒரு பாகத்தில் வைத்துள்ள தந்தை என்னை வலிய வந்து ஆட்கொண்டான். அவனைத் தவிர வேறுயாருக்கும் நாங்கள் குடியல்லோம். இனி அஞ்சுவதற்கு யாண்டு ஒன்றும் இல்லை. அவன் அடியார் அனைவரும் கூடி ஆனந்த சாகரத்தில் திளைத்திருப்போம்.

கட்டறுத்தலில் அல்லது பூரண வைராக்கியத்தில் நிலைத்திருப்பவர்க்குச் சிவஞானம் வாய்க்கிறது. அதை அடையப் பெற்றவர்க்கு அபயம் அல்லது அஞ்சாமை வாய்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *