எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்…

நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்…

நீரை தாமிரம் என்கிற செம்பு பாத்திரத்தில் வைத்து பருகி வந்தனர்…

அவர்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பதில் இந்த பாத்திரங்கள் முக்கிய பங்காற்றின…

பொதுவாக எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்…

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்.

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும்…
ஒன்று உடனடியாக வேலை செய்யும்.
அதை தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்…

உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை.
இது முழுவதுமாக விஷமானது…
இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில்…

அலுமினியம் ஆபத்தானது.

தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு சில நேரங்களில் மட்டும் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்…

மேலும், அலுமினியப் பாத்திரத்தில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவையில் உள்ள அமிலத்தன்மை பாத்திரத்தை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் உணவும் நச்சுத் தன்மை அடைந்து, உடலுக்குக் கேட்டை விளைவிக்கும்.

தவிர்க்க முடியாத காரணத்தால் அலுமினியத்தில் சமைத்தால்… உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். நீண்ட நேரம் அலுமினிய பாத்திரத்தில் வைத்திருக்க கூடாது.

மேலும், தொடர்ந்து அலுமினிய பாத்திரத்தில் சமைக்க கூடாது…

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது…
இவ்வளவு ஆபத்தான அலுமினிய பாத்திரத்தில் தான் நாம் சமைத்து உணவருந்துகிறோம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம்…
அப்படி என்றால் நாம் ப்ரஷக் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகிறது…

ஆனால் வேகாது.
பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு…

உதாரணம் :–
துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும். அதனால் தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் மிருதுவானால் போதாது, சீராக சமைக்கப்பட வேண்டும்…

அலுமினியம் மற்றும் ப்ரஷர் குக்கரில் சமைக்க கூடாது.

அலுமினியத்தில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட உணவு வகைகளை குறிப்பிட்ட பாத்திரத்தில் தயாரித்து உண்பதால், அவை அமிர்தத்துக்கும் மேலான பொருளாகும் என்கிறார் போகர்…

போஜனம் சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள் எவையெவை என பார்ப்போம்…

மண்பாண்டம் :–
100% பலன் தரக்கூடியது…

உணவின் மீது வெப்பம் சீராக பரவுவதாலும், மண்பாத்திரத்தில் உள்ள நுண்துளைகள் மூலம் காற்று உணவில் ஊடுறுவுவதால் ஆவியில் வேக வைத்த தன்மையை உணவு பெறுகிறது.

மேலும், சமைத்த உணவு பல மணிநேரம் கெடாமல் இருக்கும். உணவில் அமிலத்தன்மையை சமன் படுத்தும்…

உபயோகித்த பின், பாத்திரங்களை நன்றாக கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்…

வெண்கலம் :–
97% பலன் தரக்கூடியது…

இதில் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டு போகாது. மேலும், நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும்…

நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருட்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும்.

இதை உபயோகப்படுத்திய பின் நன்றாக கழுவி ஈரத்தை வெயிலில் காய வைக்க வேண்டும்…
ஏனெனில், ஈரத்தன்மையால் கழிம்பு போன்ற படலம் ஏற்பட்டு உணவின் தன்மையை மாற்றி விடும்.

பித்தளை :– [வெள்ளீயம் (Tin) பூசப்பட்டது.]
95% பலன் தரக்கூடியது…

வெள்ளீயம் பூச்சு இல்லாத பித்தளை பாத்திரத்தில் சமையல் செய்தால் உணவு விஷமாகும். ஆகவே, வெள்ளீய பூச்சு போய்விட்டால் மறுபடியும் புதிதாக வெள்ளீயத்தை பூசிதான் உபயோகப்படுத்த வேண்டும்.

“செம்பு என்கிற தாமிர” பாத்திரம் :-

இதில் தண்ணீர் ஊற்றி பருகலாம்…
நீரிலுள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழித்து, நீரை காரத் தன்மையாக மாற்றி நல்ல பலன்களை தரும்…

தாமிரப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது, அது நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
உப்பு இல்லாத உணவுகளையே செம்பு பாத்திரத்தில் சமைக்க வேண்டும்.
ஏனெனில், உணவில் சேர்க்கபடும் ‘உப்புடன்’ வினை புரிந்து உணவின் தன்மை விஷமாகும்.

ஆகவே, “உப்பு இல்லாமல்” உணவுகளை மட்டுமே செம்பு பாத்திரத்தில் சமைக்கலாம்…

திருப்பதி லட்டு தாமிரப் பாத்திரங்களில்தான் செய்யப்படுகிறது…

ஈயம் (lead) என்பது வேறு, வெள்ளீயம் (Tin) என்பது வேறு…

ஈயம் (Lead) நம் உடலுக்கு கெடுதலானது…

வெள்ளீய பாத்திரங்களை பயன்படுத்தலாம்…

நம் முன்னோர்கள் வெள்ளீய பாத்திரங்களை தான் பயன்படுத்தி வந்தனர்… அவர்கள் பயன்படுத்திய வெள்ளீய பாத்திரங்களை தான், நாம் தவறுதலாக ஈய பாத்திரம் என்று கூறுகிறோம்…

வெள்ளீய பாத்திரத்தில் சமைத்தால் உணவின் சுவை அதிகரிக்கும்…

பீங்கான் :-
தரமான முறையில் தயாரிக்கப்பட்ட பீங்கான் பாத்திரத்தை பயன்படுத்தலாம்…

பிளாஸ்டிக் மற்றும் “நான்ஸ்டிக்” பாத்திரம் :-
“நான்ஸ்டிக்” பாத்திரத்தில் சமைக்கும் போது ‘perfluorinated compounds’ என்னும் நச்சு பொருள் உணவை விஷ தன்மையாக்கும்…

பிளாஸ்டிக் பாத்திரத்தில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பேப்பர், பிளாஸ்டிக் இலை போன்றவற்றில் உணவு பொருட்களை பறிமாறவே கூடாது…

பிளாஸ்டிக் டம்ளரில் கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் படிந்திருக்கும்…
அதில் தண்ணீர் பருகும் போது, நமது உடலில் இலகுவாக சென்று விடும்…

மேலும், டீ, காபி மற்றும் சூடான உணவுகள் பிளாஸ்டிக்கோடு வினை புரிந்து பல்வேறு உடல் நலகேட்டை உருவாக்கும்.

மேலும், மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப் உபயோகிப்பதும் தவறு… சூட்டில் மெழுகு உருகி உணவுடன் கலந்து உடலுக்குள் சென்று பலவிதமான நோய்களை உருவாக்கும்…

இதைப் போன்றே ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் போன்ற காற்று, ஒளி படாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.
Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது…

எனவே, பிளாஸ்டிக் மற்றும் மெழுகு பூசிய பேப்பர் டம்ளரை தவிர்த்து மண், வெண்கலம், செம்பு, வெள்ளீயம், பீங்கான், கண்ணாடி, எவர்சில்வர் போன்ற டம்ளரில் நீர் பருகலாம்.

அதேபோல் உணவு உண்ண வாழை இலை, தாமரை இலை போன்றவை சிறப்பு வாய்ந்தது.
இந்த வாழை இலையில் உள்ள பச்சையம் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும்…

மர பாத்திரங்களையும், கல் பாத்திரங்களையும் உணவுகளை கையாள, பதப்படுத்த பயன்படுத்தலாம்…

இரும்பு பாத்திரங்கள் :-
இதில் சமைக்கும் போது வெப்பம் உணவில் சீராக பரவும். மேலும், இரும்பு சத்து உணவோடு கலந்து நன்மைகள் தரும்.

ஆனால், இந்த பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, நீண்ட நேரம் உணவை இதில் வைத்திருக்க கூடாது. சமைத்தவுடன் வேறு பாத்திரத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும்.

மேலும், துவர்ப்பு மற்றும் உப்பு கலந்த உணவுகளை இதில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்…
ஏனெனில், இரும்பு உப்பு மற்றும் துவர்ப்பு சுவையான உணவுகளுடன் வினை புரிந்து, விரைவில் உணவு கெட்டு விடும்.

எவர்சில்வர் பாத்திரங்கள் :-

நமது பொருளாதார மற்றும் பயன்பாட்டு வசதிக்காக வேண்டுமானால் எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்…
இந்த பாத்திரத்தால் பெரிதாக தீங்கோ, நன்மைகளோ இல்லை…
ஆனால், கீரல் இல்லாத எவர்சில்வர் பாத்திரங்களை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கீரல் இருந்தால் இதிலுள்ள நிக்கல் மற்றும் குரோமியம் உணவில் கலந்து நம் ஆரோக்கியத்தை பாதிக்கும்…

“பாத்திரம் அறிந்து பிச்சையிடு…”

அதாவது ஒருவரது உள்ளம் என்கிற பாத்திரத்தை அறிந்து, பிச்சை என்கிற தானம், உதவி செய் என்பதாகும்…

இதுவே நமது மனதிற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்…

அது போல…
“பாத்திரம் அறிந்து உண்…”
இதுவும் கூட நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்…

எனவே,
உடலாலும், மனதாலும்…
நலமுடன், வளமுடன்…
நாம் வாழ்வோம்,
வாழ வைப்போம்,
வாழ வகை செய்வோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *