புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை

புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை
மானப்பா மணத்தக்காளி சாறுகூட
மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு
தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல்
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால்
இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே…
-புலிப்பாணி சித்தர்

பொருள்:
மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும், கை கால்கள் சுடாது… நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *