அகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தை

சிவபெருமான் : உச்ச சக்தி

பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை உச்ச சக்தியாக நம்புகின்றனர் அகோரிகள். நடக்கும் அனைத்திற்கும் சிவபெருமானே பொறுப்பு, நிபந்தைகள், விளைவுகள் மற்றும் தாக்கங்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆத்மா அனைத்தும் உலகளாவிய 8 பிணைப்புகளால் (அஷ்டம ஹாபாஷா) மூடப் பட்டிருக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிற்றின்பம், கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே அந்த எட்டு பிணைப்புகலாகும். இந்த பிணைப்புகளை நீக்கும் திசையில் தான் அனைத்து அகோரிகளும் தங்களின் வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.

நம்பிக்கைகள்

சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும் இந்த 8 பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும். மயான பூமியில் செய்யப்படும் சடங்குகள் மனிதர்களின் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அளித்திடும். பாலியல் சம்பந்தப்பட்ட சடங்குகள் ஒருவரை சிற்றின்ப எண்ணங்களை நீக்கும். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும். இந்த 8 பிணைப்புகளும் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சதாசிவாவுடன் சேர்ந்து மோட்சத்தை பெறுவான் என அகோரிகள் நம்புகின்றனர்.

மாய வித்தை நம்பிக்கை

அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. அதற்கு காரணம் நீண்ட காலமாக அவர்கள் செய்து வரும் யோகாசனங்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை. அவர்களின் சடங்குகளும், பழக்க வழக்கங்களும், மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் உண்மையான இயல்பை உணர்வதிலுமே அடங்கியிருக்கும்.

யாரை வழிப்படுவார்கள் அகோரிகள்?

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா.

எளிய தத்துவம்

அகோரிகளின் தத்துவப்படி, அவர்களுக்குள் தான் இந்த அண்டம் குடி கொண்டுள்ளது. நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அதே போல் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அதனால் நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப் படுவதில்லை. காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்சிகளுக்கு அப்பர்ப்பட்டவர்கள் அவர்கள். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும். குணமாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
நோயாளிகளின் உடலில் இருந்து மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும் “உருமாற்றும் குணமாக்கல்” சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கும் மாய வித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அகோரிகளின் உயரிய நிலையிலான உடல் மற்றும் மனதே, அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *