குல தெய்வம்

நாம் பெரும்பாலும் குல தெய்வத்தை முக்கியத் துவம் கொடுத்து எந்த நல்ல காரியமாகட்டும், கெட்ட காரியமாகட்டும் நாடி வேண்டிக்கொள்கிறோம். நல்லது இதில் நமக்கு சில காரியங்கள் கை கூடுவதுண்டு

காரணம் ஏன்? தெரிந்து கொள்ளுங்கள் எப்பொழுது நாம் மனதார கல்லையோ மண்ணையோ தெய்வமாக நினைத்து உள்ளன்போடு வணங்குகிறோமோ அங்கு நிச்சயம் பலன் கிடைக்கிறது.

நமது முன்னோர்கள் வேண்டியதாலேயே இது வழி வழியாக நடை முறைப்படுத்தப்பட்டு வேண்டுதலும் நடைபெறுகிறது அவர்கள் எப்பொழுதும் இறைவா நாங்களும் எங்கள் சந்ததியினரும் உங்களுக்கு அடிமைகளாவோம் எங்களையும் எங்கள் சந்ததிகளையும் காப்பாற்று என்கின்றனர். அப்பொழுது அவரவர் அறிந்தது போல படையல் படைக்கின்றனர். அதை அவர்களே உண்கின்றனர் பலருக்கு அண்ண தானம் செய்கிறார்கள். இதில் குறிப்பாக இரண்டு நல்லவைகள் இறைவனால் பார்க்கப்படுகிறது.
அவர்கள் படைத்தது மாமிசமாக இருப்பினும் சாராயமாக இருப்பினும், கடவுள் இவைகளை பார்ப்பதில்லை அவர்களின் அரியாமையாகே எடுத்துக்கொள்கிறார் அவர்களின் அன்பையும், கபடமற்ற வேண்டுதலையும் உள்ளன்போடு ஏற்கிறார்.

ஏனென்றாள் அவர்கள் மன உருதியோடு ஒரே உருவத்தை ஏற்று மனதே அங்கே வைக்கின்றனர். எனவேதான் இறையருளுக்கு பாத்திரமாகிறார்கள்.

மற்றபடி இவர்கள் வணங்குவதால் கடவுள் அங்கே வசிப்பதில்லை. யார் ஒருவர் வழி வழியாக பூசை செய்யும் பூசாரியாகி பரிசுத்தமாக இருப்பார்களோ அவர்களாள் இறைவனது திருஸ்டியால் சிறிது ஞானம் சித்தித்து அருள் வழங்க முடியும் அது சிறிது நேரத்திற்குத் தான் பிறகு அவர்களைஉக்கு நிலைக்காது.

குல தெய்வம் காண இயலாதவர்கள் உலகிற்கே தந்தையான இறைவன் சிவபெருமானையே குல தெய்வமாக ஏற்று வணங்கும் பொழுது குல தெய்வத்தை விட பன்பமடங்கு பலன் கிடைக்கும் நல்லது ஓம் நமசிவாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *