திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -46

அந்தி வண்ணா அரனே சிவனே என்று
சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே

படைத்தற்பொருட்டு அந்திவண்ணனாய்ப் பொன்நிறங் கொண்டருள்பவனே, துடைத்தற்பொருட்டு அரனாய் நீலநிறங் கொண்டருள்பவனே, அருளுதற் பொருட்டுச் சிவனாய் வெண்ணிறங் கொண்டருள்பவனே என்று திருந்திய மெய்யடியார்கள் தொழுவர். உலகந்தோன்ற வேண்டும் எனச் சிவன் திருவுள்ளங் கொண்டதும் அதன் பொருட்டுத் திருவருளின்கண் முதற்கண் தோன்றிய நிறம் ஐந்து. இவ்வைந்தும் ஒருங்கு கூடியவனே முந்திவண்ணன். அவனே முழுமுதல்வன். இங்ஙனம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அடியேனும் வாழ்த்த, அந்திவண்ணனும் அருளால் வந்து அடியேன் அகம் புகுந்தருளினன்.

முதல்வன்- வினைமுதற் காரணன். பரன் – யாவர்க்கும் மேலானோன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *